சீனாவின் எச்சரிக்கையை அலட்சியம் செய்த அவுஸ்திரேலியா!
சீன பிரஜைகளிற்கு கொவிட் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகளிற்கு எதிராக பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என சீனா விடுத்துள்ள எச்சரிக்கையை அவுஸ்திரேலியா அலட்சியம் செய்துள்ளது.
சீனாவிலிருந்து வருபவர்களிற்கு கொவிட் சோதனையை கட்டாயமாக்கியுள்ள நாடுகளிற்கு எதிராக சீனா விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து கவலையடையவில்லை என அவுஸ்திரேலியாவின் திறைசேரி விவகாரங்களிற்கான அமைச்சர் ஜிம் சால்மெர்ஸ்(Jim Chalmers) தெரிவித்துள்ளார்.
சீனாவில் தற்போது பெரும் கொரோனா அலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் ஒவ்வொரு நாடும் இந்த பெருந்தொற்றை ஒவ்வொரு விதத்தில் கையாள்கின்றது எமக்கு சொந்த கருத்துக்கள் உள்ளது போல உலக நாடுகளிற்கும் சொந்தமான நிலைப்பாடுகள் காணப்படும் அவற்றின் அடிப்படையில் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல உலகநாடுகள் புதிய கொவிட் சோதனைகளை அறிவித்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து விடயங்களையும் சமநிலைப்படுத்தி தீர்மானங்களை எடுப்பதே அரசாங்கம் என்ற அடிப்படையில் எங்கள் கடமை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.