ஆஸ்திரேலியாவே அதிர்ந்து போன துப்பாக்கிச்சூடு சம்பவம்... ரத்த வெள்ளத்தில் மூவர்
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து - போகியில் உள்ள கால்நடைகள் பண்ணை மீது நேற்று (04-08-2022) காலையில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்ததுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் குண்டு பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளனர். மேலுமொருவர் படுகாயம் அடைந்தார்.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூட்டில் அடிவயிற்றில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தவரை மீட்டு, அவசர அறுவை சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மக்கே நகரில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள், அவரது உறவினர்கள் என தெரிய வந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர், மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி விட்டார். அவரை தேடும் வேட்டையை பொலிஸ் முடுக்கி விட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இந்த துப்பாக்கிச்சூட்டால் ஆஸ்திரேலியா அதிர்ந்து போய் இருக்கிறது.
ஏனென்றால் அங்கு உலகிலேயே கடுமையான துப்பாக்கிச்சட்டங்கள் இருந்தும், இப்படியொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதுபற்றி பொலிஸ் பொறுப்பாதிகாரி கருத்து தெரிவிக்கையில் இது மிகவும் அரிதான ஒரு சம்பவம் என தெரிவித்தார்.