அவுஸ்திரேலியாவில் திருந்திய பாடசாலை மாணவர்; புகைத்தல் குறைந்தது
அவுஸ்திரேலியாவில் பாடசாலை மாணவர்களிடையே மின் சிகரட்டுக்கள் புகைப்பது குறைவடைந்து வருவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் நெருப்பின்றி புகை பிடிக்கும் மின் சிகரட்டுக்கள் (vaping) அரசாங்கம் தடை விதித்து சுமார் வருடங்கள் ஆகின்றது.
ஆஸ்திரேலியாவின் புற்றுநோய் அமைப்பு
கடந்த 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களிடையே 17.5% ஆக இருந்த மின் சிகரட்டு பாவனை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 14.6% ஆகக் குறைவடைந்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் புற்றுநோய் அமைப்பு நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ளது.
இந்த ஆய்வில் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மின் சிகரட்டுகளை பயன்படுத்தும் விகிதம் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாகக் குறைவடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இளம் அவுஸ்திரேலியர்களிடையே மின் சிகரட்டுகள் பாவனை விகிதம் அண்மையகாலமாக தலைகீழாக மாறிவிட்டன. கடந்த ஆண்டில் அதிகாரிகள் 10 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத மின் சிகரட்டுகள் கைப்பற்றியுள்ளது என அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்துள்ளார்.
"எங்கள் கல்வி மற்றும் தடுப்பு பிரச்சாரங்கள் மின் சிகரட்டுகள் மற்றும் புகைபிடிப்பதைத் தடுப்பதற்கு மற்றும் நிறுத்துவதற்கு மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்