அவுஸ்திரேலிய பிரதமர் விடுத்துள்ள பகீரங்க எச்சரிக்கை!
தமது நாட்டு விமானத்தை நோக்கி ஒளிரச்செய்யப்பட்ட சீனாவின் கதிரியக்க அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கப்படும் என்று அவுஸ்திரேலியா எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கையை பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) விடுத்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி வியாழன், அவுஸ்திரேலியாவின் வடக்கு பிரதேசத்தில் தமது நாட்டு பாதுகாப்பு விமானம் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது, அந்த விமானத்தை நோக்கி, சீனாவின் கப்பலில் இருந்து கதிரியக்கம் ஒளிரச்செய்யப்பட்டது.
அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படை வீரர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து இன்று கருத்து வெளியிட்ட இது சீனாவின் "மிரட்டல் நடவடிக்கை" என்று விபரித்தார், "மிகவும் கவலைக்குரியது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீன கப்பல்களின் இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்திரேலியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச் சம்பவம் அமெரிக்க, ஜேர்மன் மற்றும் ஜப்பானிய விமானங்களுக்கு இடம்பெற்றிருந்தால், நிலைமை எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை எவரும் ஊகிக்கமுடியும் என்றும் மொரிசன் தெரிவித்துள்ளார்.
எனினும் சீனா இதுவரை இந்த சம்பவம் தொடர்பில் கருத்துக்களை கூறவில்லை