வரி கோப்பு பதிவு குறித்த வாக்குறுதிகளை கனடிய அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை
தானியங்கி அடிப்படையில் வரி கோப்புக்களை பதிவு செய்வதாக கனடிய மத்திய அரசாங்கம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வரித்துறைசார் நிபுணர்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
வரிச் செலுத்துகைக்கு உட்படாதவர்களின் விபரங்களைக் கொண்டு அரசாங்கம் தானாகவே வரிக் கோப்புக்களை பதிவு செய்யும் பரீட்சார்த்த முயற்சி குறித்து அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
எனினும், இந்த உறுதிமொழி இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் இந்த விடயத்தை தெரிவித்திருந்தது.
இவ்வாறு வரிக் கோப்புக்களை பதிவு செய்வதன் மூலம் குறைந்த வருமானம் ஈட்டுவோர் நலன் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
வரிக் கோப்புக்களை பதிவு செய்தவர்கள் அரசாங்க நலன்களைப் பெற்றுக்கொள்ள முடிவதாகவும் இதனால் பதிவு நடவடிக்கை அவசியமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக கனடிய வருமான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.