கனடாவில் வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்
கனடாவில் வீட்டு வாடகை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டு வாடகை தொகை சராசரியாக 2202 டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் மே மாத வீட்டு வாடகை குறித்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வாடகை தொகையானது 9.3 வீதமாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 0.6 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. நாட்டின் அநேகமான பகுதிகளில் வாடகைத் தொகை உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடாவின் முன்னணி வீட்டுமனை இணைய தளங்களில் ஒன்றான Rentals.ca நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவில் சராசரி வாடகை தொகை முதல் தடவையாக 2200 டாலர்களை தாண்டி உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரு படுக்கையறையை கொண்ட வீடு ஒன்றின் வாடகை தொகை சராசரியாக 1927 டாலர்கள் எனவும் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் வாடகை தொகை 2334 டாலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சஸ்கட்ச்வான் மாகாணத்தில் வாடகை தொகை 21 தசம் நான்கு வீதமாக அதிகரித்துள்ளது.