அந்த நாட்டிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிருங்கள்: கனேடிய மக்களுக்கு வலியுறுத்தல்
ரஷ்ய ஆக்கிரமிப்பு அபாயம் இருப்பதால் உக்ரைனுக்கு அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு கனடா நிர்வாகம் தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன் எல்லைக்கு அருகில் ரஷ்யா தனது 100,000 துருப்புக்களை நிறுத்தியுள்ளது. பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் எனில் ரஷ்யா ஆக்கிரமிக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கனேடிய மக்கள் உக்ரைன் உடனான அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் உக்ரைன் மீதான தாக்குதல் திட்டம் ஏதும் தங்களிடம் இல்லை என ரஷ்ய தெரிவித்துள்ளது. இருப்பினும், சூழலுக்கு ஏற்றவாறு முடிவெடுக்கப்படும் எனவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற பதட்டம் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் கடும் விளைவு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.