அமெரிக்க பல்கலையில் இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு கிடைத்த உயர் அங்கீகாரம்
மிசோரி பல்கலை.,யைச் சேர்ந்த இந்திய வம்சாவளி உட்பட இரு பேராசிரியர்கள், நடப்பாண்டுக்கான தேசிய கண்டுபிடிப்பாளர்கள் அகாடமியின் கௌரவ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவின் என்.ஏ.ஐ., எனும் தேசிய கண்டுபிடிப்பாளர்கள் அகாடமி, சிறந்த கண்டுபிடிப்பாளர்களுக்கு உயர் கௌரவ விருது வழங்கி வருகிறது.

இந்திய வம்சாவளி பேராசிரியர்
மக்களின் வாழ்க்கை தரம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகம் ஆகியவற்றுக்கு பயன் தரக்கூடிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியோருக்கு இந்த விருது வழங்கப்படும்.
அந்தவகையில், இந்தாண்டுக்கான என்.ஏ.ஐ., கௌரவ விருதுக்கு கொலம்பியாவின் மிசோரி பல்கலையில் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சிறப்பு பேராசிரியராக பணியாற்றி வரும், இந்திய வம்சாவளி பேராசிரியர் ரகுராமன் கண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதே பல்கலையில் பணியாற்றும் தாவர மரபியல் பேராசிரியரான, ஆசிய நாடான வியட்நாமை பூர்வீகமாக கொண்ட ஹென்றி நுயென் என்பவரும் இக்கௌரவ பதவிக்காக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார்.