வெளிநாடொன்றில் ஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்: 13 பேருக்கு நேர்ந்த பரிதாபம்

Awful for 13 people\ Terrorist attack on a hotel in a foreign country
By Vasanth Feb 04, 2021 12:41 PM GMT
Report

சோமாலியாவில் ஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.‌ அல் கொய்தாவுடன் தொடர்பு கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இவர்கள் அங்கு ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை குறி வைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி தலைநகர் மொகாதிசுவில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வெளிநாட்டு விருந்தினர்களை கொன்று குவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மொகாதிசுவில் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகாமையில் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. சோமாலியா அரசின் மூத்த அதிகாரிகள் இந்த ஓட்டலில் கூடுவது வழக்கம்.

கார் குண்டு வெடிப்பு அந்தவகையில் நேற்று முன்தினம் உள்ளூர் போலீஸ் தலைமை அதிகாரி, மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த ஓட்டலில் குழுமியிருந்தனர். இதன் காரணமாக ஓட்டலை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் ஓட்டலின் நுழைவாயில் மீது காரை மோதி வெடிக்கச் செய்தார். வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. அங்கு கரும்புகை மண்டலம் உருவானது.‌ கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகள் 4 பேர், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே ஓட்டலுக்குள் நுழைந்தனர். 13 பேர் கொன்று குவிப்பு அங்கு அவர்கள் தங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல் சுட்டுத் தள்ளினர்.‌ பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலில் ஓட்டலில் இருந்த முன்னாள் ராணுவ ஜெனரல் ஒருவர் உட்பட 13 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஓட்டலை சுற்றி வளைத்தனர். அதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் ஓட்டலுக்குள் இருந்த சிலரை பிணைக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு, போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.‌ இரு தரப்புக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இறுதியில் தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு அதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளால் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்கள் உட்பட ஓட்டலில் இருந்த அனைவரையும் போலீசார் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மேலும் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 10 க்கும் மேற்பட்டோரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.‌ இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

பயங்கரவாதிகளை ஒழிப்பதில் சோமாலியா ராணுவத்துக்கு உதவியாக இருந்து வந்த அமெரிக்க வீரர்கள் 700 பேரை திரும்பப் பெறும் முடிவை அமெரிக்கா அறிவித்த சில வாரங்களுக்குப் பின் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. எனவே படைவீரர்களை திரும்பப் பெறுவது சோமாலியாவில் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் உள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US