கனடாவில் பறவைக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கை
கனடாவில் பறவைக் காய்யச்சல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக வர்த்தக ரீதியான பண்ணைகளில் இந்த நோய்த் தொற்று பரவி வருவதாக மாகாண விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் பறவைக் காய்ச்சல் நோய் பரவும் என்ற போதிலும் தற்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ள வைரஸ் ஆண்டு முழுவதிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடியவை என மாகாண விவசாயத்துறை அமைச்சர் லானா பொப்ஹம் தெரிவித்துள்ளார்.
H5N1 என்ற வைரஸ் பண்ணைப் பறவைகளை தாக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பறவைக் காய்ச்சல் காரணமாக மாகாணத்தின் இரண்டு இடங்களில் காணப்படும் ஏழு பண்ணைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நோயை கட்டுப்படுத்துவதற்கு சகல வழிகளிலும் நடவடி;ககை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2004ம் ஆண்டில் பறவைக் காய்ச்சல் காரணமாக கனடாவில் சுமார் 17 மில்லியன் பண்ணை விலங்குகள் அழிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.