கனடாவில் தாதி ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் தாதி ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் லோவர் மெயின்லண்ட் பகுதியைச் சேர்ந்த தாதி ஒருவரையே இவ்வாறு பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாதி சட்டவிரோதமான முறையில் புடொக்ஸ் என்ற ஊசி மருந்தை பயன்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
உரிய மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றாது நோயாளிகளுக்கு குறித்த ஊசி மருந்தை பயன்படுத்தி உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட தாதிக்கு ஐந்து மாத கால பணி இடை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 30 ஆயிரம் டாலர்கள் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய மருத்துவ பரிந்துரைக்கு புறம்பான வகையில் புடொக்ஸ் என்ற ஊசி மருந்தை பயன்படுத்துவது கனடாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
உடலின் தோள்களில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதற்காக அழகுக்கலை நிபுணர்கள் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவார்கள் என்பதை குறிப்பிடத்தக்கது.
எனினும் குறித்த தாதி எவ்வித மருத்துவ பரிந்துரைக்கும் கட்டுப்படாது இந்த ஊசி மருந்தை பயன்படுத்தி உள்ளார்.
எனினும் இந்த ஊசி மருந்தை ஏற்றிக்கொண்ட எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவர் ஒருவரின் நேரடி கண்காணிப்பில் மட்டுமே இந்த ஊசி மருந்தை பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ விதிமுறைகளுக்கு மீறி செயல்பட்ட காரணத்தினால் குறித்த தாதிக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.