கனடாவின் இந்தப் பகுதியில் போதை மருந்து பயன்பாட்டு மரணங்கள் அதிகரிப்பு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் போதை மருந்து பயன்பாட்டினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு முதல் இதுவரையிலான காலப் பகுதியில் போதை மருந்து பயன்பாட்டினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் போதைப் பொருள் தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 192 ஆக காணப்பட்டது என மாகாண பிரேத பரிசோதனை பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இது கடந்த ஜூன் மாத எண்ணிக்கையிலும் 31 வீத உயர்வு என்பதுடன் நாள் ஒன்றுக்கு 6.2 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 42 பேருக்கு போதைப் பொருளுடன் தொடர்புடைய மரணங்கள் சம்பவிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிறிய நகரங்களான லிலிலூட், மிஷன், டெரேஸ், பவல் ரிவர், காரிபூ மற்றும் சில்கோட்டின் பகுதிகளில் பதிவாகியுள்ளது.
வீதிகளில் போதைப் பொருள் விற்பனை செய்யும் நடவடிக்கைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
போதை மருந்து பயன்பாட்டினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறிப்பாக மித மிஞ்சிய அளவில் போதை மருந்து பயன்பாட்டினால் ஏற்படும் மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.