உலகளவில் கவனத்தை ஈர்த்த ஆண் குழந்தை! வைரலாகும் புகைப்படங்கள்
பெண் ஒருவர் கருப்பை மாற்று சத்திரசிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் மருத்துவ உலகை ஆச்சரியத்திற்குள் உள்ளாக்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த ஜனவரி மாதம் தனது தாயாரின் கருப்பையை பெற்றுக்கொண்ட அவுஸ்திரேலியாவை சேர்ந்த கேர்ஸ்டி பிரையன்ட் என்ற பெண் கருப்பை மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் குழந்தையை பிரசவித்துள்ளார்.
சுமார் 16 மணித்தியாலம் இடம்பெற்ற கருப்பை மாற்று சத்திர சிகிச்சை மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்தது.
கருப்பை மாற்று சத்திரசிகிச்சை நிகழ்ந்து 3 மாதத்தின் பின்னர் குறித்த பெண் கருத்தரித்தார்.
இந்த நிலையில் அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மருத்துவ உலகை ஆச்சரியத்திற்குள் மூழ்கவைத்த சம்பவமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.