அம்பியூலன்ஸ் இல்லாத காரணத்தினால் 8 மாத சிசுவிற்கு நேர்ந்த பரிதாபம்
பிரிட்டிஷ் கொலம்பியாவில், அம்பியூலன்ஸ் இல்லாத காரணத்தினால் எட்டு மாத சிசுவொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பின்தங்கிய பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எட்டு மாத சிசுவொன்றுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்துள்னர்.
இந்த சம்பவம் மிகவும் துயரம் மிக்கது என தெரிவித்துள்ளனர். அம்பியூலன்ஸ் சேவையை வழங்கும் பணியாளர்களுக்கான தட்டுப்பாடு காரணமாக சிசுவினை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் தாமதமாகியுள்ளது.
அவசர அழைப்புக்களுக்கு பதிலளிக்கக் கூடிய போதியளவு அம்பியூலன்ஸ் சேவை வசதிகள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரிட்டிஷ் கொலம்பியாவில் அம்பியூலன்ஸிற்காக காத்திருந்த இரண்டு பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.