சேர்பியா கால்பந்து போட்டியில் நடந்த துயர சம்பவம்; Mladen Cizovic திடீர் மரணம்
ஐரோப்பா- சேர்பியாவில் கால்பந்து போட்டி ஒன்றுக்கு நடுவே, அணி நிர்வாகி, 44 வயதுடைய ம்லடன் சிசோவிச் (Mladen Cizovic) உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராட்னிக்கி-1923 (Radnicki-1923) அணிக்கும், மிலடோஸ்ட் (Mladost) அணிக்கும் இடையிலான போட்டி கடந்த நேற்று மாலை நடைபெற்றது.

மீன் உணவு குறித்து முறைப்பாடு
போட்டி ஆரம்பமாகி 22ஆவது நிமிடத்தில், சிசோவிச் விளையாட்டுத் திடலுக்கு அருகில் திடீரெனச் சரிந்து விழுந்ததனையடுத்து அவர் உடனடியாக அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும், அவர் அங்கேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பு ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, சிசோவிச் தான் மதிய உணவாகச் சாப்பிட்ட மீன் (மீன் உணவு) குறித்து முறைப்பாடு தெரிவித்ததாக கோசிக் வெளிப்படுத்தியுள்ளார்.
கோசிக்கின் கூற்றுப்படி, போஸ்னியாவைச் சேர்ந்த சிசோவிச், அணியின் மதிய உணவின் போது மீனை சாப்பிட மறுத்து, அதன் தரம் குறித்து முறைப்பாடு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
ஒக்டோபர் 23ஆம் திகதி ராட்னிக்கி-1923 கழகத்தின் நிர்வாகியாகப் பொறுப்பேற்ற பிறகு, சிசோவிச் கலந்துகொண்ட மூன்றாவது போட்டி இதுவாகும். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வீரர்களும் ஊழியர்களும் கண்ணீர் சிந்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.