மீண்டும் வழமைக்கு திரும்பிய எக்ஸ்(ட்விட்டர்) தளம்!
எக்ஸ் தளமானது இன்று காலை 11 மணியளவில் திடீரென்று அனைத்து பயனர்களுக்கும் முடங்கியது. முகப்புப் படத்தை தவிர பதிவுகள் உள்ளிட்ட வேறு எதுவும் காட்டவில்லை.
இந்த நிலையில், எக்ஸ்(ட்விட்டர்) வலைதளத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கான மக்கள் ட்விட்டர் வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
காரணம் வெளியிடப்படவில்லை
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மாஸ்க், எக்ஸ் எனப் பெயரை மாற்றினார். இந்நிலையில் எக்ஸ் தள முடங்கிய போதும் , பயனர்களால் எக்ஸ் தளத்திலும் பதிவிட முடிந்தது.
அதேபோல், எக்ஸ் தளத்தில் உள்ள ஸ்பேஸ் செயல்பட்டது. இந்த கோளாறை எக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சுமார் ஒரு மணிநேரம் சரிசெய்து பகல் 12.15 மணியளவில் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
அதேசமயம் , எக்ஸ் தளம் முடங்கியதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.