வாய் துர்நாற்றமா? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தி பாருங்க
நம்மில் பலருக்கு பிரச்சனையாக உள்ள வாய் துர்நாற்றம் நீங்க டிப்ஸ் சிலவற்றையும் அதற்கான காரணிகளையும் பார்க்கலாம். வாய் நாற்றத்திற்கு வாயிலுள்ள நுண் கிருமிகள் தான் பெரும்பாலும் காரணமாக அமைகிறது.
அதோடு வாய் துர்நாற்றம் வேறு சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கும். இந்த வாய் துர்நாற்றம் காரணமாக மற்றவர்களுடன் அருகில் நின்று பேசுவதற்கும் மற்றவர் அருகே நெருங்கி செல்வதற்கும் தயக்கமாக இருக்கும்.
எனவே இதனை ஆரம்பத்திலே போக்குவது நல்லது. அதற்கான சூப்பர் டிப்ஸ் ஒன்றை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
- பட்டைத் தூள் – 1 டீஸ்பூன்
- தேன் – 2 டீஸ்பூன்
செய்முறை
எலுமிச்சை சாறு, பட்டைத் தூள் மற்றும் தேன் ஆகிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் தேவைப்பட்டால் சிறிது தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம். தினமும் பிரஷ் செய்யும் முன் இந்த மௌத் வாஷைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
இதேபோல தினமும் இரண்டு முறை செய்து வந்தால், வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கலாம்.
எலுமிச்சை இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை கொண்டிருப்பதால், இது பற்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதோடு, வாயிற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.