அமெரிக்க ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு கனடிய மக்கள் பல்வேறு வழிகளில் எதிர்ப்பு
அமெரிக்க ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு கனடிய மக்கள் பல்வேறு வழிகளில் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் கனடாவின் ஏற்றுமதிகள் மீது வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
மேலும் கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக உள்வாங்க போவதாக ட்ரம்ப் கருத்து வெளியிட்டிருந்தார்.
கனடாவிற்கு எதிராக டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் கனடிய மக்கள் பல்வேறு வழிகளில் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
சிறிய அளவிலும் பெரிய அளவிலும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் பல்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
விளையாட்டு போட்டிகளின் போது மக்கள் தங்களது தேசப்பற்றை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடிய விமானி ஒருவர் அமெரிக்க எல்லை பகுதியில் கனடிய கொடியில் காணப்படும் மேப்பில் இலை சின்னத்தை அடிப்படையிலான வழித்தடத்தில் பயணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல்வேறு வர்த்தக நிலையங்களிலும் விளையாட்டு போட்டிகளிலும் கனடிய மக்கள் தங்களது தேசப்பற்றினை வெளிப்படுத்தும் முனைப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.