வேலைத்தளங்களில் ஊழியர்களின் தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை!
பணிபுரியும் இடங்களில் ஊழியர்களின் தலைமுடியின் தன்மை, சிகை அலங்காரங்கள் அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை விதிக்கும் சட்டமூலம் ஒன்றுக்கு ஆதரவாக பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் கீழ் சபை இன்று வாக்களித்தது,
இத்தகைய பாரபட்சங்களால் அதிகமாக கறுப்பினப் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என இச்சட்டத்துக்கு ஆதரவானோர் தெரிவிக்கின்றனர்.
இந்த சட்டத்தின்படி, வேலைத்தளங்களில் தலைமுடியின் தன்மை, நீளம், தலைமுடியின் நிறம், சிகையலங்காரம் ஆகிவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது குற்றமாகும் என இச்சட்டமூலத்தை முன்வைத்த ஒலிவியர் சேர்வா கூறியுள்ளார்.
பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 44 பேரும் எதிராக இருவரும் வாக்களித்தனர்.
அடுத்ததாக, இச்சட்டமூலம் நாடாளுமன்ற செனட் சபையின் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.