பிரித்தானியாவில் 2008இற்குப் பின் பிறந்தோர் புகைப்பிடிக்க தடை; அதிரடியாக கொண்டுவரப்பட்ட சட்டம்!
பிரித்தானிய பாராளுமன்றத்தில் புகைத்தல் தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து லண்டனில் 17 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய சிறுவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புகைப்பழக்கமற்ற ஒரு தலைமுறையை உருவாக்கும் நோக்கில் கடைகளில் புகையிலை விற்பனை செய்வதை சட்டவிரோதமாக்குவதன் மூலம் 2009 ஜனவரி 01 இற்குப் பிறகு பிறந்த எவரும் புகைப்பிடிப்பதைத் தடுப்பதை நோக்காகக் கொண்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேவேளை லண்டனில் உடல் நலக்குறைவு ஏற்படுவதற்கான முக்கிய காரணியாக புகைப்பது இருக்கிறது.
இந்நிலையில் குழந்தைகள் பயணிக்கும் கார்களிலும் விளையாட்டு மைதானங்களிலும் பாடசாலைகளுக்கு வெளியேயும் வைத்தியசாலைகளிலும் புகைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.