பங்களாதேஷில் இடம்பெற்ற கோர விபத்து
பங்களாதேஷில் இடம்பெற்ற கோர விபத்தில் பதினொரு பேர் பரிதாபகமாக உயிரிழந்துள்ளனர்.
ஆளில்லா ரயில்வே கடவையை கடக்க முயன்ற பஸ் மீது ரயில் மோதியதில் இவ்வாறு பதினொருவர் உயிரிழந்துள்ளனர்.
பங்களாதேஷின் சிட்டகாங் மாவட்டத்தில் ஆளில்லா ரயில்வே கேட் ஒன்று உள்ளது. இதை தலைநகர் டாக்காவுக்கு சென்ற மினி பஸ் கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று மோதியது.
இதில் பயணித்த ஏழு மாணவர்கள் நான்கு ஆசிரியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் 'விபத்தில் சிக்கிய பஸ் தண்டவாளத்தில் பல நூறு மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது.
11 பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.'சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட உடல்கள் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன' என்றார்.