இந்தியாவில் விசா சேவைகளை மீண்டும் தொடங்கிய பங்களாதேஷ்
வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக முடங்கி இருந்த விசா சேவைகளை இந்தியாவில் மீண்டும் வங்கதேசம் துவக்கிஉள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 2024ல் நடந்த மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சியை இழந்தது.

உறவில் விரிசல் இதைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றுக் கொண்டது.
இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்தியா உடனான உறவில் விரிசல் ஏற்பட்டது.
அந்நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களான ஹிந்துக்கள் மீது தொடர் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதுடன், பல ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்.
இதனால், இருநாட்டு துாதரக உறவு மற்றும் விசா சேவைகளும் பாதிக்கப்பட்டன. இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் பிற்பகுதி முதல் தன் சேவைகளை வங்கதேச துாதரகம் தற்காலிகமாக நிறுத்தியது.