கனடாவில் மீண்டும் வட்டி வீதம் உயர்வு
கனடாவில் மீண்டும் வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கனேடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை 75 புள்ளிகளினால் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2.5 வீதமாக காணப்பட்ட வட்டி வீதம் தற்பொழுது 3.25 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையில் மத்திய வங்கி வட்டி வீதத்தினை 300 புள்ளிகளினால் உயர்த்தியுள்ளது.
1990களின் நடுப் பகுதியின் பின்னர் முதல் தடவையாக இவ்வாறு வட்டி வீதம் வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உக்ரேய்ன் போர், சீனாவின் கோவிட் முடக்கம் போன்ற ஏதுக்களினால் இவ்வாறு வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக உலக அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை ஈடு செய்யும் நோக்கில் உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே கனடாவும் பணவீக்கத்தை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் எரிபொருள் விலையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்லும் நிலைமையை அவதானிக்க முடிகின்றது.
மத்திய வங்கி வட்டி வீதங்களை உயர்த்துவதன் காரணமாக ஏனைய வங்கிசார் வட்டி வீதங்களும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.