பராக் ஒபாமா – மிச்சல் தம்பதி விவாகரத்து விவகாரம் ; உறுதி செய்த தம்பதி
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா - அவரது மனைவி மிச்சல் ஒபாமா இருவரும் விவாகாரத்துப் பெறப்போவதாக எழுந்தது உண்மையில்லை, என்று இருவரும் ஒன்றாகத் தோன்றி உறுதி செய்துள்ளனர்.
சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகப் பங்கேற்காத நிலையில், இந்த விவாகரத்து தொடர்பான வதந்தி பரவியுள்ளது.
விவாகரத்து தொடர்பான வதந்தி
இந்த நிலையில்தான், மிச்சல் ஒபாமா தன்னுடைய சகோதரருடன் இணைந்து நடத்தும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின்போது, ஒபாமாவும் தோன்றி பேசினார்.
அப்போது, இருவரும் தங்களுக்கே உரிய நகைச்சுவை மற்றும் சாதாரண பேச்சு வழக்கில், தங்களுக்கு இடையே விவாகரத்து என்பது வெறும் வதந்திதான், நாங்கள் நீடித்த, மிகவும் அன்பான வாழ்க்கையை தொடர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை உறுதி செய்துள்ளனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய மிச்சல், இவர் எனது கணவர் என்று அன்போடு கூறினார்.
அப்போது, மிச்சலின் சகோதரர் கிரெய்க், இருவரையும் ஆரத் தழுவினார். உங்கள் இருவரையும் ஒரே அறையில் இன்று பார்ப்பது மிகவும் சிறப்பாக உள்ளது என கிரெய்க் கூற, அதற்கு சிரித்தபடி, மிச்சல், ஆமாம், எனக்குத் தெரியும். நாங்கள் விவாகரத்துப் பெறாவிட்டாலும், பெற்றுவிட்டதாகக் கூறுகிறார்கள் என்றார்.