அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா - மிச்செல் ஒபாமா விவாகரத்தா?
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா (Barack Obama) - மிச்செல் ஒபாமா (michelle obama ) விவாகரத்து செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக வரும் 20 ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், டிரம்ப் பதவியேற்பு விழாவில் மிச்செல் ஒபாமா பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு விழாக்களில் முன்னாள் ஜனாதிபதிகள் அவர்களின் இணையுடன் பங்கேற்பது கலாச்சார பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன் காரணமாக , முன்னாள் ஜனாதிபதி ஒபாமா (Barack Obama) , அவரது மனைவி மிச்செல் (michelle obama ) விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்ற ஊகங்கள் வலுத்துள்ளது.
ஒபாமாவுக்கும், மிச்செலுக்கும் கருத்து வேறுபாடு
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரிம் இறுதி அஞ்சலி கூட்டத்தில் பராக் ஒபாமா (Barack Obama) மட்டுமே பங்கேற்றார். அப்போதே சமூக ஊடகங்கள் பலவற்றிலும் ஒபாமாவுக்கும் (Barack Obama) , மிச்செலுக்கும் (michelle obama ) கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
அதனால் இருவரும் பிரியப் போகிறார்கள் என்று பேசப்பட்டது. இந்நிலையில் ட்ரம்ப் பதவியேற்பு விழாவிலும் மிச்செல் (michelle obama ) பங்கேற்க மாட்டார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியானதால் இந்த ஊகங்கள் வலுப்பெற்றுள்ளது.
மிச்செல் ஒபாமா தரப்பிலிருந்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பில், அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா (Barack Obama) பங்கேற்கிறார். ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா (michelle obama ) பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராக் ஒபாமாவும் (Barack Obama) , மிச்செல் ஒபாமாவும் (michelle obama ) 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பராக் ஒபாமா - மிச்செல் ஒபாமா (michelle obama ) விவாகரத்து செய்யப்போவதாக அந்நாட்டு சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.