கனடாவில் 5 மில்லியன் டொலர் லாட்டரி பரிசு வென்ற நபர்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வசிக்கும் ஒருவருக்கு 5 மில்லியன் டொலர் லாட்டரி ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது.
இருப்பினும், இவ்வளவு பெரிய தொகை வென்ற பின்னரும் லாட்டரி விளையாடுவதை நிறுத்த எந்தத் திட்டமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ரிச்ச்மண்ட் நகரைச் சேர்ந்த ஜாக்கி எல். என்பவர், கடந்த ஜனவரி 28ம் திகதி நடைபெற்ற Lotto 6/49 க்ளாசிக் 5 மில்லியன் ஜாக்பாட் பரிசை “க்விக் பிக்” (Quick Pick) முறையில் வென்றதாக B.C. Lottery Corporation (BCLC) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற ஜாக்கி எல்., தமது வீட்டுக் கடனை முழுமையாக செலுத்துவது, ஓய்வு வாழ்க்கைக்காக சேமிப்பு செய்வது மற்றும் தமது குழந்தைகள், பேரக்குழந்தைகளுக்கு ஆதரவு அளிப்பது போன்ற திட்டங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
“நாங்கள் இப்போது முழுமையாக நிம்மதியாக இருக்க முடியும் (We will be A-OK),” என அவர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், தமது வாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் செய்யும் எண்ணமோ, பணத்தை சீராக கையாளும் பழக்கத்தை விடும் எண்ணமோ இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.