கட்சியின் பலத்தை அதிகரிக்க தேர்தல் அறிவித்த பிரீமியருக்கு கிடைத்த அதிர்ச்சி
B.C Premier David Eby, of the New Democratic Party, called the snap election, Eby's gamble backfired: பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரீமியரான டேவி எபி முன்கூட்டியே தேர்தல் அறிவிக்க, அவருக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரீமியரான டேவி எபி, தான் சார்ந்த நியூ டெமாக்ரட்டிக் கட்சியின் பலத்தை அதிகரிப்பதற்காக முன்கூட்டியே தேர்தல் அறிவித்தார்.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், பிரீமியர் எபி முன்கூட்டியே தேர்தல் அறிவிக்க, எதிர்பாராதவிதமாக அவரது கட்சி தோல்வி அடைந்துவிட்டது.
அதே நேரத்தில், சுமார் நூறு ஆண்டுகளில் முதன்முறையாக கன்சர்வேட்டிவ் கட்சி பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெற்றி பெற்றுள்ளது.
விடயம் என்னவென்றால், பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரீமியராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லார்ன் டோர்க்சன் சில வாரங்களுக்கு முன்புதான் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பலருக்கு அவரைத் தெரியாது. ஆக, பிரிட்டிஷ் கொலம்பியா மக்கள் ஏன் அதிகம் தெரியாத ஒருவரை பிரீமியராக தேர்ந்தெடுத்தார்கள் என்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

மக்கள் விரும்பாத நிலையில், தலைவர்கள் தேவையில்லாமல் முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கக்கூடாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
அத்துடன், தேர்தல் பிரச்சாரத்தில் பிரீமியரான எபி முன்வைத்ததெல்லாம் ட்ரம்புக்கு எதிரான கருத்துக்கள்தான். அது சந்தர்ப்பவாத அரசியல் என மக்கள் நினைக்கிறார்கள்.
ஆக மொத்தத்தில், மக்களுடைய விருப்பதைக் குறித்து கவலைப்படாமல், தங்கள் இஷ்டத்துக்கு தேர்தல் அறிவித்த கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளருக்கு, தாங்கள் விரும்புவது ஆட்சி மாற்றத்தை என்பதை தெளிவாக தெரியப்படுத்திவிட்டார்கள் மக்கள்!