கனடாவில் சீட்டிலுப்பு மூலம் மேயர் தெரிவு
கனடாவில் சீட்டிலுப்பு மூலம் மேயர் பதவிக்கு ஒருவர் தெரிவு செய்யப்பட்ட சம்வமொன்று பதிவாகியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் கேனல் பிளட்ஸ் (Canal Flats,) என்னும் கிராமத்தில் இவ்வாறு மேயர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேயர் பதவிக்காக போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் தலா 158 வாக்குகளைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த வாக்குகள் மீளவும் எண்ணப்பட்டதுடன் அப்பொழுதும் வாக்குகள் சம அளவில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
மீள வாக்குகளை எண்ணத் தேவையில்லை எனவும் சீட்டிலுப்பு மூலம் ஒருவரை மேயராக தெரிவு செய்ய முடியும் எனவும் அனைத்து கட்சிகளும் இணங்கியுள்ளன.
இதனால் தேர்தலில் சம எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக் கொண்ட மார்க் தோர்த்தீ மற்றும் டக்ளஸ் மெக்காட்டன் ஆகிய இருவரின் பெயர்களும் எழுதி சீட்லுப்பு நடாத்தப்பட்டது.
மாகாண நீதிமன்ற நீதிபதி இந்த இரண்டு பெயர்களில் ஒன்றை தெரிவு செய்தார்.
இந்த தெரிவின் போது தோர்த்தீ நகரின் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.