பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத் தீ ஆபத்து குறித்து எச்சரிக்கை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத் தீ தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் வடக்கு மற்றும் கடற்கரை பகுதிகளில் மழை பெய்தாலும், வெப்பநிலை சிறிது குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் புதிய காட்டுத் தீ ஏற்படும் அபாயம் தொடர்ந்து நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அறிவுறுத்தல்
அண்மைய புதுப்பிப்பில், காரிபூ பகுதி மற்றும் தென்கிழக்குப் பகுதிகள் இன்னும் வெப்பமாகவும் உலர்ந்தும் காற்று வீசும் நிலை நீடிப்பதால், வெளிப்புற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது மாகாணத்தில் செயல்பாட்டில் உள்ள காட்டுத் தீகள் சுமார் 120 ஆக குறைந்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 9 தீகள் அணைக்கப்பட்டுள்ளன, ஆனால் 3 புதிய தீகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஹோல்ட்ரி கிரிக் Holtry Creek பகுதியில் இந்த வாரம் வெளியிடப்பட்ட வெளியேற்ற எச்சரிக்கை நீக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்தது ஒரு வெளியேற்ற உத்தரவும், சில எச்சரிக்கைகளும் இன்னும் அமலில் உள்ளன.