கனடாவில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கையில் உயர்வு
கனடாவில் கோவிட்19 தொற்றாளர் எண்ணிக்கயில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடா அரசு வெளியிட்ட அண்மைய அறிக்கையின்படி, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனைகளில் நேர்மறை முடிவுகள் கூடுதலாக கிடைக்கப் பெற்றுள்ளன.
பருவ கால வைரஸ்
கடந்த 7-ஆம் திகதியுடன் முடிந்த வாரத்தில், கடந்த வாரத்தை ஒப்பிடும்போது 9.6% அதிகரிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கிறது.
அண்மைய வாரங்களில் பதிவான வைரஸ் பரவல்களில் 99 வீதமானவை COVID-19 சம்பவங்களாகவே உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
“COVID-19 இப்போது ஒரு பருவ கால வைரஸாகவே மாறிவிட்டது.வருடம் முழுவதும் பரவினாலும், கோடைகாலத்தில் குறைவாகி, இப்போது மீண்டும் அதிகரிக்கிறது,” என மருத்துவ நிபுணர் டாக்டர் மார்லா ஷாபிரோ தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் வீட்டு பரிசோதனைகள் (home testing) செய்யாமல் இருப்பதும், முந்தைய ஆண்டுகளைப்போல கடுமையாக பாதிக்கப்படாததும் காரணமாக உண்மையான எண்கள் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.