பிரிட்டிஷ் கொலம்பியாவில் காற்றின் தரம் குறித்து வளெியான புதிய அறிவிப்பு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தில் யேல் (Yale) மற்றும் ஸ்பஸ்ஸம் (Spuzzum) இடையே பரவியுள்ள காட்டுத் தீ காரணமாக காற்றின் தரம் தொடா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஃப்ரேசர் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள (Fraser Valley Regional District) பல வீடுகளுக்கு வெளியேற்ற எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
செய்லர் பார் (Sailor Bar) காட்டுத் தீ என அழைக்கப்படும் இந்த தீ சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என பிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீ சேவை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தீயின் புகை காரணமாக, கிழக்கு ஃப்ரேசர் பள்ளத்தாக்கு மற்றும் மேட்ரோ வென்கூவர் பகுதிகளில் காற்றுத் தர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சூடான வானிலை மற்றும் உள்ளூர் மாசு வெளியீடுகளும் புகையுடன் இணைந்து காற்றில் அபாயகரமான மாசு அளவை உருவாக்கியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மகாணம் முழுவதும் நீடித்த வெப்ப அலை காரணமாக காட்டுத்தீ அபாயம் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.