கனடா பிரதமர் தென் கொரிய நீர்மூழ்கிக் கப்பல் தொழிற்சாலைக்கு விஜயம்
கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தென் கொரியாவில் நீர்மூழ்கிக் கப்பலக்ள தயாரிக்கும் உற்பத்திசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
கனடாவின் அடுத்த தலைமுறை நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்ளும் போட்டியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான தென் கொரியாவின் ஹன்வா ஓஷன் (Hanwha Ocean) நிறுவனம் தயாரித்த கப்பல்களைப் பார்வயைிடும் நோக்கில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
தென்கொரியா விஜயம் செய்துள்ள பிரதமர் அங்கு பாதுகாப்பு கூட்டணி ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கார்னியுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் டேவிட் மெக்ஜின்டி, வைஸ் அட்மிரல் ஆங்கஸ் டாப்ஷி மற்றும் தென் கொரியா பிரதமர் கிம் மின்-சொக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கொண்ட நவீன உற்பத்தி நிலையத்தையும் கார்னிக்கு காட்டியது. கனடா, தனது பழமையான விக்டோரியா வகை (Victoria Class) நீர்மூழ்கிக் கப்பல்களை மாற்றுவதற்காக 12 புதிய கப்பல்கள் கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளது.
இது ஆர்க்டிக் பகுதியில் இராணுவ பங்கேற்பை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        