பிரிட்டிஷ் கொலம்பியாவில் நேர மாற்ற ரத்து: ஏற்படப் போகும் சிக்கல்கள்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் இனி கடிகார நேரத்தை மாற்றாமல், நிரந்தரமாக முறையைப் பின்பற்ற முடிவு செய்துள்ளது.
எனினும், இந்த மாற்றத்தால் அறுவை சிகிச்சைகள் தள்ளிப்போதல், பிரசவ நேரம் மாறுதல் மற்றும் சந்திப்புகள் தவறான நேரத்திற்கு மாறுவது போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழக்கூடும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
வட அமெரிக்காவின் பெரும்பான்மையான பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை தங்களது கடிகாரங்களை ஒரு மணி நேரம் பின்னோக்கி நகர்த்தும் வேளையில், பி.சி. மாகாணம் மட்டும் தங்களது நேரத்தை மாற்றாமல் அப்படியே தொடரவுள்ளது.

இதன் காரணமாக, காலண்டர் மற்றும் அட்டவணைச் மென்பொருட்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளன.
வான்கூவர் கோஸ்டல் மற்றும் ஐலேண்ட் ஹெல்த் அமைப்புகள் நோயாளிகளிடம் தங்களது மருத்துவச் சந்திப்பு நேரங்களை மீண்டும் சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளன.
ஏனெனில், நேர மாற்றத்தால் சந்திப்புகள் ஒரு மணி நேரம் மாற வாய்ப்புள்ளது. விக்டோரியா பல்கலைக்கழகம் மற்றும் யுபிசி ஆகிய கல்வி நிறுவனங்கள், காலண்டர் அப்டேட்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட ஊழியர் சந்திப்புகளின் நேரம் தவறாகக் காட்டப்படலாம் எனத் தெரிவித்துள்ளன.
மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் புதிய நேர மண்டலத்திற்கு ஏற்ப தங்களது மென்பொருட்களைப் புதுப்பித்துள்ளன. எனினும், அதற்கு முன் உருவாக்கப்பட்ட காலண்டர் பதிவுகளைப் பயனர்கள் கைமுறையாக மாற்ற வேண்டியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.