கனடாவில் கரடியொன்றினால் இரண்டு பெண்களுக்கு நேர்ந்த அவலம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் கரடிகளின் தாக்குதலுக்கு இலக்கான இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது 30 மற்றும் 48 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்துள்ளனர்.
விசாலமான கருப்பு கரடி ஒன்று இந்த இரண்டு பெண்களையும் கொடூரமாக தாக்கியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த இரண்டு பெண்களும் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயம் அடைந்த நிலையில் கீழே விழுந்து கிடந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
கீழே விழுந்து கிடந்த இரண்டு பெண்களையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலை மேற்கொண்ட கரடி சம்பவ இடத்தை விட்டு அகலாது அந்த இடத்திலேயே சஞ்சரித்துக் கொண்டு இருந்ததாகவும் பின்னர் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கரடியை விரட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி முதலில் வெற்றி அளிக்கவில்லை எனவும் கரடி தாக்குதலுக்கு இலக்கான இரண்டு பெண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உலறங்கு வானூர்தி மூலம் அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
எனினும் இரண்டு பெண்களும் மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மலையேறும் நோக்கில் குறித்த வனப்பகுதிக்கு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 288 கரடிகளை வனவிலங்குத்துறையினர் சுட்டக்கொன்றுள்ளனர்.