கனேடிய பல்கலைக்கழகத்தில் படித்த இளம்பெண் வெளிநாடு ஒன்றில் கணவனால் அடித்துக்கொலை
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள வாட்டர்லூ பல்கலையில் பயின்ற சாரா (Sarah Inam, 37), தனது கணவரான ஷா நவாஸ் அமீர் (Shahnawaz Amir) என்பவரால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானியர்களான சாராவுக்கும் ஷா நவாஸுக்கும் திருமணமாகி நான்கு மாதங்கள்தான் ஆகியுள்ளன.
இந்நிலையில், கணவரை சந்திப்பதற்காக பாகிஸ்தான் சென்றிருந்த சாராவை, குடும்பத்தகராறில் கொலை செய்ததாக சாராவின் கணவர் ஷா நவாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு உதவியதாக, ஷா நவாஸின் தந்தையான அயாஸ் அமீர் (Ayaz Amir) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Submitted by Sara Syeda
சாராவுடன் வாட்டர்லூ பல்கலையில் பயின்ற சாரா சையதா (Sara Syeda) என்னும் அவரது தோழி, சாரா இப்படி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை நம்பமுடியவில்லை. அவர் தகராறெல்லாம் செய்யும் ஆளில்லை, ஒரு ஈயைக் கூட அவர் காயப்படுத்தியதில்லை என்கிறார்.
உடற்பயிற்சி செய்யும் டம்பெல் என்னும் உபகரணத்தால் தான் சாராவை அடித்துக் கொன்றதாகவும், அவரது உடலை குளியல் தொட்டிக்குள் மறைத்துவைக்க முயன்றதாகவும் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், அவர் கூறிய விடயங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. ஆகவே சாரா உயிரிழந்ததின் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாமோ என சந்தேகம் எழுந்துள்ளது.