வீட்டைப் புதுப்பித்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்! நினைத்துப் பார்க்க முடியாத அளவு கிடைத்த தங்கப் புதையல்
பெல்ஜியத்தில், வீடொன்றை புதுப்பிக்கும் பணியின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் அடித்தள சுவர்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தங்கச் சேமிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு சுமார் ஒரு கோடியே 40 இலட்சம் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு ஃபிளாண்டர்ஸ் பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டில், புதிய கழிவு நீர் குழாய்களைப் பதிப்பதற்காகத் துளையிடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, இந்தத் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் அடங்கிய மறைக்கப்பட்ட புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தங்கப் புதையல் யாருக்கு சொந்தமாகும் என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.
வீட்டுப் புதுப்பிக்கும் பணியில் இருந்த தொழிலாளர்கள் இந்த தங்கப் புதையலைக் கண்டுபிடித்த நிலையில், குறித்த தொழிலாளர்களும், வீட்டின் உரிமையாளரும் மற்றும் உள்ளூர் தொண்டு நிறுவனமும் இந்தத் தங்கத்தைக் கோருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.