கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தலைமை தாங்கும் பெனாஸிரின் மகள்!
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு அசீபா பூட்டோ ஸர்தாரி தலைமை தாங்கவுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோ, முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரி ஆகியோரின் மகளே ஆசிபா பூட்டோ ஸர்தாரி (Aseefa Bhutto Zardari ) ஆவார்.
28 வயதான ஆசிபாவும் ஆவரின் மூத்த சகோதரரான பிலாவல் பூட்டோ ஸர்தாரியும் (32) தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு பிலாவல் தலைமை தாங்குகிறார்.
பிலாவல் நேற்று பிலாவல் பூட்டோ ஸர்தாரி (Bilawal Bhutto Zardari) அமெரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள ஜம்மு காஷ்மீரில் நடைபெறவுள்ள தேர்தல்களில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரச்சாரங்களுக்கு ஆசிபா பூட்டோ ஸர்தாரி தலைமை தாங்கவுள்ளார்.
அமெரிக்காவில் கட்சிப் பிரதிநிதிகளை பிலாவல் பூட்டோ சந்திக்கவுள்ளதுடன் அங்கு செய்தியாளர் மாநாடொன்றிலும் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பாகி;ஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.