அனைவருக்கும் நன்றி: பாரதி பாஸ்கரின் லேட்டஸ்ட் வீடியோ
இல்லத்தரசி, பட்டிமன்ற பேச்சாளர், என பன்முக திறமைகொண்ட பாரதி பாஸ்கர் உடல்நலம் தேறி வருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாரதி பாஸ்கர்.
இவர் உடல்நலம் தேற வேண்டுமென அவரது ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சைக்கு பின்னர் வீடு வந்துள்ள பாரதி பாஸ்கள் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், வழக்கமான சிரிப்பு மற்றும் உற்சாகத்துடன் பேசும் அவர், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
நான் உங்களுக்காக எதுவும் செய்யவில்லை ஆனாலும் நீங்கள் என்மீது அன்பு காட்டுகிறீகள். இதற்கு முக்கிய காரணம் தமிழ்.
நான் தமிழில் பேசியது தான் உங்களையும் என்னையும் இணைத்துள்ளது. உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.
மருத்துவமனையில் என்உயிரை காப்பாற்றிய அத்தனை மருத்துவருக்கும் என் மனமார்ந்த நன்றி. திரும்பவும் சந்திப்போம் நன்றி என்று கூறியுள்ளார்.