முப்படை தளபதி பிபின் ராவத்தின் மனைவி குறித்து பலரும் அறியாத உண்மைகள்! வெளியான புதிய தகவல்
இந்தியாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி உட்பட 13 பேர் பலியான சம்பவம் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூர் அருகே முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் பிபின் ராவத்தின் மனைவி குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, முப்படை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் குடும்ப பொறுப்புகளை மட்டும் கவனிக்காமல் ராணுவ நல பொறுப்புகளையும் ஏற்று இருந்தார்.
ராணுவத்தினரின் மனைவிமார் நல சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு சிறந்த தலைவராக விளங்கி ராணுவ வீரர்களின் குடும்பத்து பெண்களின் நலனுக்காக பாடுபட்டதாக கூறப்படுகிறது.
பெண்களுக்கு அழகுக்கலை, தையல், கேக் மற்றும் சாக்லெட் தயாரித்தல் போன்ற பயிற்சிகளை கற்றுக்கொடுத்து அவர்களை வாழ்க்கையில் முன்னேற ஊக்குவித்துள்ளார்.
கணவர் ராணுவத்தை கட்டிக்காக்க ராணுவ அதிகாரிகளின் குடும்பங்களை இவர் காத்து வந்துள்ளார். தற்போது ராணுவ ஹெலிகாப்டரில் கணவரோடு சேர்ந்து பலியாகி தனது பெயரையும் ராணுவத்தில் நிலைநிறுத்தி என்றும் அழியா பெருமையை பெற்றுள்ளார்.