இலங்கை ஜனாதிபதி அனுரவுக்கு வாழ்த்துக்கூறிய அதிபர் பைடன்!
இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளத்தில் அவர் வாழ்த்தினை பதிவிட்டுள்ளார்.
அதில் அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான தேர்தலை அடுத்து இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடாத்தியதற்காக இலங்கை மக்களைப் பாராட்டிய ஜனாதிபதி பிடன், ஜனாதிபதி திஸாநாயக்கவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்.
Congratulations on your victory, @AnuraDisanayake.
— President Biden (@POTUS) September 26, 2024
The people of Sri Lanka chose you as their president in a free, fair, and peaceful election of which they are justifiably proud.
I look forward to working with you to advance peace, security, and prosperity in the Indo-Pacific.