கணவரை கொலை செய்த பெண் உட்பட 6 பேருக்கு பொதுமன்னிப்பு அளித்த ஜோ பைடன்
புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 6 பேர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், நாளும் கொடுமைப்படுத்திய கணவனை கொலை செய்து தண்டனை அனுபவித்துவரும் பெண் உட்பட, போதை மருந்து வழக்கில் சிக்கியவர்களும் பொதுமன்னிப்பு பெறுகின்றனர்.
80 வயதான Beverly Ann Ibn-Tamas என்பவர் இரண்டாம் நிலை கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றிருந்தார். 33 வயதில் தாம் கர்ப்பிணியாக இருக்கும் போது தமது கணவரால் கொடூரமான துன்புறுத்தலுக்கு இலக்கானதாக Tamas வெளிப்படுத்தியுள்ளார்.
இது ஒருகட்டத்தில் எல்லை மீறவே, துப்பாக்கியால் சுட்டு கணவனை கொலை செய்துள்ளார் Tamas. விசாரணை முடிவில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் சிறை தண்டனை காலம் முடிந்தும் குறிப்பிட்ட காரணங்களுக்காக அவர் சிறையிலேயே கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது ஜனாதிபதியின் புத்தாண்டு பொதுமன்னிப்பு பட்டியலில் அவர் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இவருடன், மேலும் 5 பேர்கள் பொதுமன்னிப்பு பெறுகின்றனர். இவர்கள் ஐவரும் போதை மருந்து பயன்பாடு, விற்பனை உள்ளிட்ட குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.