பாதுகாப்பு செலவுகள் அதிகரிக்கும் ; கனடிய பாதுகாப்பு அமைச்சர்
நாட்டின் பாதுகாப்பு செலவுகள் அதிகரிக்கப்படும் என கனடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர் தெரிவித்துள்ளார்.
இந்த தசாப்தம் பூர்த்தியாகும் முன்னதாக நேட்டோ கூட்டுப் படையின் பரிந்துரைகளுக்கு அமைய பாதுகாப்பு செலவுகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு வீதத்தை பாதுகாப்பு செலவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென நேட்டோ அமைப்பு கோரியுள்ளது.
எதிர்வரும் 2029ம் ஆண்டளவில் கனடாவின் மொத்த பாதுகாப்புச் செலவுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.75 வீதமாக உயர்வடையும் பிளயர் தெரிவித்துள்ளார்.
கனடிய அரசாங்கம் ஏற்கனவே கண்காணிப்பு விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகளை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.