பிரான்ஸ் பிரதமர் அலுவலகம் அருகே வெடிப்பு சம்பவம்
பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் பிரதமர் அலுவலகம் அருகே வெடிச்சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் இன்று (7) இடம்பெற்றுள்ளது.
தீ விபத்துக்கான காரணம்
இதன்போது தலைநகரமான பாரிஸில் வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறப்படுகிறது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்.
அத்துடன் குறித்த வேன் ஒரு பொது நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர் ஒருவர் இயந்திரக் கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறியிருக்கிறார்.
இருப்பினும் வெடிப்புகள் மற்றும் தீ விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.
செபஸ்டியன் லெகோர்னு நாடு முழுவதும் கூட்டங்களை நடத்த தயாராகி வருகின்ற நிலையில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.