காணாமல்போன பெண்ணை மோப்ப நாய் உதவியுடன் கண்டுபிடித்த பார்வையற்ற பெண்

Eye Problems Toronto Canada
By Balamanuvelan May 31, 2023 08:45 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

காணாமல் போன பெண்மணி ஒருவரை, தன் மோப்ப நாய் உதவியுடன் பார்வையற்ற பெண் ஒருவர் கண்டுபிடித்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று கனடாவில் நிகழ்ந்துள்ளது.

கண் பார்வையற்றவராக இருந்தாலும், நீச்சலில் கனடாவுக்குத் தங்கப்பதக்கங்கள் வாங்கிக் கொடுத்த சாதனையாளர் ஜெசிகா (Jessica Tuomela, 39).

ஆனால், அவர் தற்போது செய்துள்ள ஒரு விடயம் அவரது முந்தைய சாதனைகளையே மிஞ்சிவிட்டது. இனி அவரை ஒரு பார்வையற்ற நீச்சல் வீராங்கனையாக மட்டும் அல்ல, வேறொரு விடயத்துக்காகவும் மக்கள் நினைவுகூரப்போகிறார்கள்.

அத்துடன், அவருக்கும் அது நீங்கா நினைவாக நிலைக்கப்போகிறது.

காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் விடயம் எவ்வளவு கஷ்டம் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த விடயம். எத்தனை நாடுகளில், எத்தனை பொலிசார், எத்தனை அவசர உதவிக் குழுக்கள் இணைந்து தேடியும், காணாமல் போன நபரை கடைசியில் சடலமாக மீட்ட துயர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆனால், காணாமல்போன பெண்மணி ஒருவரை, தன் மோப்ப நாய் உதவியுடன் கண்டுபிடித்துள்ளார் ஜெசிகா. அதுவும், வெறும் 40 நிமிடங்களிலேயே!

வான்கூவர் தீவிலுள்ள Saanich என்னுமிடத்தில் வழ்ந்துவருகிறார் ஜெசிகா. அவரிடம், கானாமல் போனவர்களை மோப்ப சக்தி மூலம் கண்டுபிடிக்கும் லூசி என்னும் மோப்பநாய் ஒன்று உள்ளது.

சமீபத்தில், அவர் வாழும் பகுதியிலுள்ள பெண்மணி ஒருவர், ஞாபக மறதி பிரச்சினை கொண்டவர், காணாமல் போய்விட்டிருக்கிறார். அக்கம்பக்கத்தவர்கள் ஜெசிகாவின் உதவியை நாட, லூசியுடன் அந்தப் பெண்ணைத் தேடிப்புறப்பட்டுவிட்டார் ஜெசிகா.

காணாமல்போன பெண்ணை மோப்ப நாய் உதவியுடன் கண்டுபிடித்த பார்வையற்ற பெண் | Blind Woman Who Finds A Missing Woman

அவர் எங்காவது மரம், கல் போன்ற தடைகளில் மோதிவிடாமல் இருப்பதற்காக அவருடன் மற்றொரு பெண்ணும் சென்றுள்ளார்.

மூன்று கிலோமீற்றர் தொலைவிலுள்ள Elk என்னும் ஏரியின் அருகில் ஜெசிகாவை அழைத்துச் சென்றுள்ளது லூசி. அங்கே காணாமல் போன அந்தப் பெண்மணி இருந்திருக்கிறார். அவரைத் தன்னால் பார்க்கமுடியாவிட்டாலும், அவரது குரலைக் கேட்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போயிருக்கிறார் ஜெசிகா.

இவ்வளவு காலமும் மக்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்ற ஆசையிலிருந்த ஜெசிகாவின் ஆசை, லூசி உதவியுடன் நிறைவேறியதில் அவருக்கு சொல்லொணா மகிழ்ச்சி!

11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US