பிரித்தானியாவில் அரிய வகை மீனை தேடி கடலுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த நிலை!
போக்லாந்து தீவுப்பகுதியில் காணப்படும் டூத்பிஷ் என்ற அரிய வகை மீனை தேடி ஆராய்ச்சியாளர்கள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள் செயிண்ட் ஹெலீனா தீவிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் உள்பட 30 பேர் அரிய வகை டூத்பிஷ் மீனை தேடி கடந்த திங்கட்கிழமை மீன்பிடி படகில் சென்றுள்ளனர்.
போக்லாந்து தீவிலிருந்து கடலில் 200 நாட்டிகல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 22 பேர் கடலில் மாயமாகினர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மாயமான
22 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலில் விழுந்த எஞ்சிய 22 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.