பிரான்ஸில் வீடொன்றில் இருந்து மூன்று சிறுவர்களின் சடலங்கள் மீட்பு
பிரான்ஸில் வீடொன்றில் இருந்து 2 தொடக்கம் 13 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Haute-Savoie மாவட்டத்தில் உள்ள Taninges எனும் சிறு நகர்ப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு வசிக்கும் தந்தை ஒருவர், தனது 2, 11 மற்றும் 13 வயதுடைய பிள்ளைகள் சடலமாக கிடப்பதை பார்த்துவிட்டு காவல்துறையினரை அழைத்துள்ளார்.
உடனடியாக அங்கு அவசர மருத்துவக்குழு அனுப்பப்பட்டு சடலங்கள் மீட்கப்பட்டன. சம்பவத்தின் போது அப்பிள்ளைகளின் தாயார் வீட்டில் இருக்கவில்லை எனவும், அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் 60 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.