குடியிருப்பில் கேட்ட அலறல் சத்தம்: சடலமாக மீட்கப்பட்ட 3 குழந்தைகள்! பதைபதைக்கும் சம்பவம்
போலந்தில் குடியிருப்பில் இருந்து 3 பச்சிளம் குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் வடக்கு போலந்தின் Czerniki கிராமத்திலேயே இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் கைதாகியுள்ள 54 வயது Piotr மற்றும் 20 வயது Paulina ஆகிய இருவரும் ஆயுள் தண்டனையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த வீட்டியில் இருந்த தந்தை மற்றும் மகள் மீது சந்தேகம் இருந்து வந்ததாகவே அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
அந்த நபர் தமது பிள்ளைகளை மிக மோசமாக திட்டுவார் என குறிப்பிட்டுள்ளனர். சில வேளைகளில் சிறார்களின் அழுகைக் குரல்கள் கேட்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு 3 பச்சிளம் குழந்தைகளின் சடலம் மிக மோசமாக அழுகிய நிலையில் காணப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர்கள் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு சடலங்களும், சனிக்கிழமை ஒன்றும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
கைதான அந்த பெண் மீது இரண்டு பிரிவுகளில் கொலை வழக்கும், சொந்த தந்தையுடன் தகாத உறவை முன்னெடுத்ததாக வழக்கும் பதியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
அந்த நபர் மீதும் கொலை வழக்கும், 20 வயதான மகளுடன் தகாத உறவின் அடிப்படையிலும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மூன்று சடலங்களில் இரண்டு ஒரு மகளுடனும் மூன்றாவது சடலம் இன்னொரு மகளுடனும் ஏற்பட்ட முறைதவறிய நெருக்கத்தால் உருவானது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
54 வயதான Piotr தமது மனைவி இறந்த பின்னர் 10 அல்லது 12 பிள்ளைகளை தனியாக வளர்த்து வந்தார் என உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.