கனடாவில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த நிலை
கனடாவில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நியூபவுன்ட்லாண்ட்டின் Port aux Basques நகரில் 73 வயதான பெண் ஓருவரே இவ்வாறு காணாமல் போனதாகவும் பின்னர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பியோனா புயல் காற்று தாக்கத்தினால் கடல் கொந்தளித்து, பாரிய அலைகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டுக்குள் இருந்த பொது குறித்த கடல் அலையில் அடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் குறித்த பெண்ணின் சடலத்தை கனேடிய பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாரிய கடல் அலை வீட்டை தாக்கியதில் வீடு உடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புயல் காற்றினால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு Port aux Basques நகரிற்குள் அலை புகுந்த காரணத்தினால் பல வீடுகள் உடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விடவும் நகரம் மிக மோசமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என நகர மேயர் பிரயன் புட்டன் தெரிவித்துள்ளார்.