பிரிட்டிஷ் கொலம்பியாவில் அருவியில் விழுந்து மூன்று பேர் பலி – இறுதி உடலும் மீட்பு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் மீச்சன் க்ரீக் அருவியில் லேபர் டே விடுமுறையன்று அருவியில் விழுந்து உயிரிழந்த மூன்று பேரின் உடல்களில் தேடப்பட்டு வந்த ஓருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மூன்றாவது மலையேறி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணமடைந்தவர்கள் மூவரும் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 68 வயது பெண் ஒருவரும், 35 வயது பெண் ஒருவரும் 35 வயதான ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்த மீட்புப் பணிகளில் இணைந்து கொண்டு கடுயைமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரின் திறமை மற்றும் அர்ப்பணிப்பை, கனடாவுக்கு வந்துள்ள உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நன்றியுடன் பாராட்டியுள்ளனர்.