பிரதான சாலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்: புகைப்படம் வெளியிட்டு உதவி கோரும் பொலிஸ்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பிரதான சாலை 93ல் சடலமாக மீட்கப்பட்ட பெண்மணி தொடர்பில் பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் ரேடியம் அருகே Kootenay தேசிய பூங்கா சமீபமாக 35 வயது Brenda Ware சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை நடந்த இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவரது மரணத்தை சந்தேகத்திற்குரியதாக பொலிசார் கருதுகின்றனர், ஆனால் அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.
ஆல்பர்ட்டாவின் Didsbury பகுதியில் இருந்து அவர் புறப்பட்டிருக்கலாம் என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது சிவப்பு நிற வாகனத்தையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
மட்டுமின்றி மே மாதம் 4-6 வரையான நாட்களில் குறித்த வாகனத்தை காண நேர்ந்த பொதுமக்களின் உதவியையும் பொலிசார் நாடியுள்ளனர்.
சுமார் 155 மீ உயரம் கொண்ட Brenda Ware 49 கிலோ அளவுக்கு உடல் எடை கொண்டவர் எனவும், அவருக்கு நீல நிற கண்கள் மற்றும் பழுப்பு நிற கூந்தல் முடி இருந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.
அல்பர்ட்டாவின் Cremona பகுதியை சேர்ந்தவாக இருக்கலாம் என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.